ETV Bharat / international

கண் விழிகளில் பச்சை குத்தி கண் தெரியாமல் அலைந்த பெண்... ரூ. 12 லட்சம் இழந்த பரிதாபம்! - girl tattoo on eyeball get blind

சிட்னி: கண் விழிகளில் பச்சை குத்தி மூன்று வாரங்கள் கண் பார்வையை இழந்து தவித்துள்ளார் ஆஸ்திரேலிய இளம்பெண்.

கண் விழிகளில் பச்சை குத்திய பெண்
author img

By

Published : Nov 4, 2019, 9:02 PM IST

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் அம்பர் லுக் (Amber Luke). இவர் தன்னுடைய உடல் பாகங்கள் அனைத்தையும் அழகாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அவர் தன் உடலில் 200 இடங்களில் பச்சை குத்தியது மட்டுமல்லாமல் உதடு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஃபில்லர்ஸ் (fillers), காது பகுதியில் ஸ்பைக் பொருத்தல் என அனைத்தையும் முயற்சி செய்துள்ளார்.

அதன் பின், யாரும் எளிதில் முயற்சி செய்யாத கண் விழிகளில் பச்சை குத்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் மற்ற பெண்களைவிட தான் அழகாக தெரிவோம் என்று நினைத்துள்ளார். இதற்கு மொத்தமாக ரூ. 12 லட்சம் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Amber Luke
அம்பர் லுக்

இதுகுறித்து அம்பர் கூறுகையில், “கண்களில் பச்சை குத்துவது தான் மிகவும் சிரமமாக இருந்தது. கண்களில் பச்சை குத்தும் போது கண்ணாடி துளிகளைக் கண்களில் வைத்து தேய்ப்பது போன்ற உணர்வு இருந்தது. தொடர்ச்சியாக நான்கு முறை அதுபோல் செய்தனர். இதனை மிகவும் சிரமமாக உணர்ந்தேன். சரியாக செய்திருந்தால் கண்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காது. கண்களில் பச்சை குத்தும் போது சிறிது தூரம் ஆழமாகக் கண் விழிகளில் சென்றதால்தான் மூன்று வாரங்கள் கண் பார்வை இழக்க நேரிட்டது" என்று தெரிவித்தார்.

இளம்பெண்கள் சிலர் தங்களை அழகாக மாற்ற வேண்டும் என்று மிகவும் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்று பல தரப்பு மக்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Intro:Body:

Girl spends 12 lakhs for Eye tatoo 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.