சீன நாட்டில் வசித்து வருபவர் லு மெள(Lu Mou). இவர் "ஜஸ்டிஸ் ஆன்லைன்" கேம் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதில், தனது கதாபாத்திரம் எல்லாரையும் விடச் சிறப்பாகத் தோன்றுவதற்கு ரூ. 10 கோடி செலவு செய்து பிரத்தியேகமாக உருவாக்கியுள்ளார். இந்நிலையில், தனது நண்பன் லி மவுசெங் (Li Mouscheng) விளையாடுவதற்குச் சிறிது நேரம் கதாபாத்திரத்தை வழங்கியுள்ளான்.
பின்னர், ரொம்ப நேரம் கேம் விளையாடிய லி, மீண்டும் லு மெளவிற்கு வழங்க முடிவு செய்துள்ளார். அப்போது, தவறுதலாக ஆன்லைனிலிருந்த மற்றொரு நபருக்கு வெறும் ரூ. 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதைப் பார்த்த லு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்து வழக்குப் பதிவு செய்தார்.
வழக்கு, சிச்சுவான் மாகாணத்தின் ஹோங்கியா கவுண்டி நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ,அந்த பிரத்தியேக கதாபாத்திரத்தை மீண்டும் அசல் உரிமையாளரிடம் வழங்க வேண்டும். மேலும், அசல் உரிமையாளர், தள்ளுபடி விலையில் வாங்கிய நபருக்கு நஷ்ட ஈடாக ரூ. 9 லட்சம் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். மேலும், மக்கள் ஆன்லைன் கேமில் அதிக நேரம் செலவிடுவதைக் குறைக்க வேண்டும். ஒரு கதாபாத்திரத்திற்காக அதிகப் பணம் செலவு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சீனாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் ஆன்லைன் கேம் 90 நிமிடத்திற்கு மேல் விளையாடக் கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிஸ் வேர்ல்ட் 2019 போட்டியை கிறங்கடிக்க காத்திருக்கும் உலக அழகிகள்!