பாலஸ்தீனத்தில் பாமாயில் எடுப்பதற்கு ஏதுவான பனை மரங்களை சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நட்டுள்ளனர். அதிலிருந்து பாமாயில் எண்ணெய் தயாரித்த பின்பு, திறந்த வெளியில் பனை மரக் கழிவுகளை எரித்து வந்தனர். கழிவுகளை திறந்த வெளியில் எரிப்பதால் மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
இதையடுத்து பாலஸ்தீனத்தில், பனை மரத்தில் இருந்து கிடைக்கப்பெறும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு ஒரு ஆலை இயங்கி வந்தது. அந்த ஆலையில் பனை மரக் கழிவுகளில் இருந்து பாமாயில் எண்ணெய் தயாரித்தனர். அதன் பின்னர், கழிவறையில் உபயோகிக்கும் பேப்பரை தயாரித்துள்ளனர்.
விரைவில் நோட்டு, புத்தகங்களையும் தயார் செய்ய அந்த ஆலை நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்!