ETV Bharat / international

சீனாவில் சீறிப்பாயும் புதுவகை கரோனா; புதிய கட்டுப்பாடுகள் அமல் - Fresh Covid outbreak

சீனாவில் புதிய வகை கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன.

சீனா
சீனா
author img

By

Published : Nov 3, 2021, 4:08 PM IST

பெய்ஜிங்: சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவ. 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (நவ. 2) ஒருநாளில் மட்டும் 93 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் (நவ. 1) 54 ஆக இருந்தது. புதிய வகை தொற்று வேகமாக பரவிவருவதால், பல்வேறு தடை உத்தரவுகளை சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு

அதில்," குடும்பங்கள் அன்றாட தேவைகளையும், அவசர நிலைகளுக்கான தேவைகளையும் குறிப்பிட்ட அளவிற்கு விரைவாக சேமித்து வைத்துக்கொள்ளவும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உணவுப் பற்றாக்குறையைப் பற்றியோ அல்லது ஊரடங்கு நடவடிக்கைகளின் முன்னெச்சரிக்கை குறித்தோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காய்கறி விலை அதிகரிப்பு

விவசாய உற்பத்தியை எளிதாக்கவும், விநியோக சங்கிலியை சீராக வைத்திருக்கவும், பிராந்திய உணவு இருப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்யவும், நிலையான விலையை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் வர்த்தக அமைச்சகத்தின் அறிவிப்பு அலுவலர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பால் காய்கறிகளின் விலைகள் 16 விழுக்காடு அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

ஷாப்பிங் மால்கள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள், திரையரங்குகள், சுரங்கப்பாதை நிலையங்களின் நுழைவாயில்களில் உடல் வெப்பநிலையை கண்காணிக்கும் திரை அமைக்கப்பட்டுள்ளது.

விமான சேவை நிறுவனங்கள் சலுகை

நகரத்திற்கு வெளியே பயணம் செய்வதைத் தவிர்க்கவும், திருமணங்களை ஒத்திவைக்கவும், இறுதிச் சடங்குகளை எளிமைப்படுத்தவும், அத்தியாவசியமற்ற அனைத்து கூட்டங்களையும் குறைக்கவும் குடியிருப்பாளர்களுக்கு பெய்ஜிங் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிய வகை தொற்று, பெய்ஜிங் நகரத்தை தவிர்த்து, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும், தென்மேற்கு சீனாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.

சீனாவில் பல விமான சேவை நிறுவனங்கள், பயணிகள் முன்பதிவு செய்த பயணத்தை இலவசமாக ரத்து செய்வது போன்ற சலுகைகளை அளித்து வருகின்றன. இன்றைய நிலவரப்படி சீனாவில் மொத்தம் 97 ஆயிரத்து 423 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, சீனா எல்லையை அடைத்தல், கடுமையான ஊரடங்கு, நீண்டகால தனிமைப்படுத்துதல், போன்றவற்றினால் தொற்று எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டுவந்தது. மேலும், அடுத்தாண்டு பிப்ரவரி 4ஆம் தேதி பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு - மீண்டும் ஊரடங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.