ஹாங்காங்கை சேர்ந்த ஆப்பிள் டெய்லி என்ற தினசரி நாளிதழ் அரசின் அச்சுறுத்தல் காரணமாக தனது பதிப்பை இன்று முதல் நிறுத்தியுள்ளது. இதற்கு சர்வதேச சமூகத்திலிருந்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுந்துவருகின்றன.
தைவான் அதிபர் கண்டனம்
நாளிதழ் முடக்கத்திற்கு தைவான் அதிபர் த்சாய் இங்க் வென் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஹாங்காங் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், ஹாங்காங் கருத்து சுதந்திரத்திற்கு தைவான் துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் சீனா அரசு தற்போது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
தைவான் சீனாவின் சீண்டலுக்கு ஆளாகிவரும் நிலையில், ஹாங்காங்கைச் சேர்ந்த இந்த நாளிதழுக்கு ஆதரவாக தைவான் அதிபர் குரல்கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கோவாக்ஸ் தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம்