பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நான்கு புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், மனிதவள நிர்வாகி ஆலியா ஜாபர், நிதி நிர்வாகி ஜாவேத் குரேஷி, பொருளாதார நிபுணர் அசிம் வாஜித் ஜவாத், கார்ப்பரேட் நிர்வாகி ஆரிஃப் சயீத் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரக்கெட் வாரியத்தின் புதிய அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதன் ஆளுநர் குழுவில் இடம்பெறும் நான்கு சுயாதீன இயக்குநர்களில் குறைந்தது ஒரு பெண் உறுப்பினர் சேர்க்கப்பட வேண்டும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை, குறிப்பாக முதல் பெண் உறுப்பினரான ஆலியா ஜாபரை வரவேற்பதாகவும், இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்துவத உதவும் என்றும் அதன் தலைவர் எஹ்சன் மணி கூறியுள்ளார்.
பிசிபியின் மறுசீரமைக்கப்பட்ட கட்டமைப்பால் பலுசிஸ்தான், மத்திய பஞ்சாப், தெற்கு பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, சிந்து, வடக்கு ஆகிய ஆறு மாகாண அணிகள் மட்டுமே முதன்மையான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் போட்டியிட்டன.