பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவிலிருந்து 157 கி.மீ. தொலைவில் உள்ள லூசன் தீவு பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 5:05 மணிக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக மணிலாவில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதையடுத்து இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாண தலைநகரும், மிகப்பெரிய நகரமுமான படாங்கிலிருந்து 197 கி.மீ. தொலைவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலடுக்கம் அதிகாலை 4:06 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இதேபோல மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து 504 கி.மீ. தொலைவில் 6.8 ரிக்டர் அளவாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 2.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் லேசான நிலஅதிர்வு