ஈரான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ஈரானின் அண்டை நாடான துருக்கியும் பாதிப்படைந்தது. இதில் சுமார் ஏழு பேர் இறந்துள்ளதாகத் துருக்கி நாட்டின் உள் துறை அமைச்சர் சுலேய்மான் சோய்லு தெரிவித்தார். 5.7 ரிக்டர் அளவு பதிவான இந்த நிலநடுக்கத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்துள்ள ஐந்து பேர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர் என்று தெரிவித்த சுலேய்மான் சோய்லு, மீதமுள்ள நபர்கள் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறினார். இவர்களை மீட்கும் பணி துரிதகதியில் நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
துருக்கி- ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் இரண்டு நாடுகளும் பாதிப்படைந்துள்ளன. காலை 9.23 மணியளவில் ஈரான் நாட்டின் ஹபாஷ்-ஈ-ஒல்யா என்ற கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துருக்கி நாட்டில் இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 43 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.