ETV Bharat / international

உரிமையாளர் இறந்தது தெரியாமல் 3 மாதங்கள் மருத்துவமனையில் காத்திருந்த நாய்!

பெய்ஜிங்: உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் அவர் வருவார் என்ற நம்பிக்கையில் மருத்துவமனையிலேயே மூன்று மாதங்களாக காத்திருந்த நாயின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்
பெய்ஜிங்
author img

By

Published : May 31, 2020, 4:15 PM IST

சிறு வயது முதலே முதலாளி தான் தன்னுடைய உலகம் என செல்லப் பிராணிகள் வாழ்ந்து வருவார்கள். குறிப்பாக செல்லப்பிராணி நாய் மனிதனுக்கு நண்பனாகவே பழங்காலத்திருந்து தற்போது வரை இருந்து வருகிறது. காலையில் நம்மை தட்டி எழுப்புவதில் தொடங்கும் நாய்க்குட்டியின் பயணமானது இரவு வரை மகிழ்ச்சியான தருணங்களுடன் தொடர்கிறது.

நாயின் சேட்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இத்தகைய பேரன்பை கொண்டுள்ள நாயால், நம்முடையே இழப்பை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்விக்கு பதிலாக சீனாவின் வூஹான் நகரில் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் செயல்படும் தைகாங் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர், ஐந்து நாள்களில் உயிரிழந்தார். அப்போது, அவருடன் மருத்துவமனைக்கு வந்த அவரின் செல்லப்பிராணி, உரிமையாளர் வந்து விடுவார் என்ற நம்பிக்கையிலே இருந்துள்ளது. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்களும் நாயை விரட்ட மனமின்றி தினம்தோறும் உணவளித்து வந்துள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக அதே இடத்தில் காத்திருந்த நாய்க்குட்டியின் பாசம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதுகுறித்து மருத்துவர் வு குயிஃபென் Wu Cuifen கூறுகையில், "நான் ஏப்ரல் மாதத்தில் தான் இந்த நாயை முதல்முதலாக பார்த்தேன். அதை 'சியாவ் பாவோ (Xiao Bao) என அழைக்கிறேன். உரிமையாளர் வருவார் என மூன்று மாதங்களாக காத்து கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தினம்தோறும் நாய்க்கு உணவளித்து வந்தோம். ஆனால், மருத்துவமனையிலிருந்த மற்ற நோயாளிகள் புகார் அளித்ததால் சியாவ் நாயை விலங்குகள் பாதுகாப்பு சங்கத்திடம் ஒப்படைத்துவிட்டோம்" என்றார்.

  • Loyal #dog waits at a #Wuhan hospital for 3 months after his owner dies from covid-19
    7-yo dog Xiao Bao waited patiently for his owner at Wuhan hospital.Staff at Wuhan Taikang Hospital fed Xiao Bao
    Xiao's owner died 5 days after being admitted pic.twitter.com/H31Ls2Dsrh

    — Hans Solo (@thandojo) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதை ட்விட்டரில் பகிரும் பலரும், சியாவ் நாயின் செயலை பார்க்கும் போது, ஹச்சிகோ நாய் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் தனது உரிமையாளருக்காக காத்திருந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது என பதிவிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: 'வரவேற்கும், உணவு வழங்கும்'... நெதர்லாந்து ரோபோக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.