இந்தோனேஷியாவின் செண்ட்ரல் ஜாவா பகுதியின் படாங் பகுதியிலிருந்து வடக்கில் 94 கிலோ மிட்டர் தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 என கணக்கிடப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால், பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்தோனேஷியா புவியியல் ஆய்வு மையம், ”6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வர வாய்ப்புகள் இல்லை. இந்த நிலநடுக்கத்தை பாலி பகுதியில் உள்ள சிலர் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் தொடர்ந்து எரிமலை வெடிப்பு, நிலநடுக்கங்கள் ஆகியவை உணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று அதிகாலை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் அருகே 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது இரண்டரை நிமிடங்கள் வரை உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் முகக் கவசம் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு!