சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது.
இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 722 பேர் கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 34,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹூபே மாகாணத்தில் மட்டும் மூவாயிரத்து 399 பேருக்கு தொற்று புதிதாக பரவியுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைய தகவல்கள் கூறுகின்றன.
கரோனா தொற்று வேகமாக பரவுவதைத் தடுக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.
கரோனோ வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் சீனாவுடனான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொடர்பையும் துண்டித்துள்ளன.
மேலும் சீனாவில் உள்ள பிற நாட்டவர்கள் தங்களின் நாடுகளுக்கு திரும்புகின்றனர். இதேபோல், 2002 ஆம் ஆண்டு சீனாவில் சார்ஸ் நோய் பாதிப்பால் 650 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: சீனாவில் கரோனா வைரஸை பரப்பும் பாங்கோலின்?