இந்தோனேசியா மாகாணம் பப்புவாவில் பெய்து வந்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்ததுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தால் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த இயற்க்கை சீற்றத்தால் இதுவரை 58 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவில் கிட்டதட்ட 4000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.