உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பாகிஸ்தானில் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதுவரை பாகிஸ்தானில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 56 ஆயிரத்து 349 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 167 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் தகவல்களின்படி, “சிந்தில் 22 ஆயிரத்து 491 பேரும் , பஞ்சாபில் 20 ஆயிரத்து 77 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் 7 ஆயிரத்து 905 பேரும் , பலுசிஸ்தானில் 3 ஆயிரத்து 407 பேரும், இஸ்லாமாபாத்தில் ஆயிரத்து 641 பேரும் , கில்கிட் - பால்டிஸ்தானில் 619 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 209 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்தனர். இதுவரை ஆயிரத்து 167 பேர் கோவிட் -19 உயிரிழந்தனர். மொத்தம் 17 ஆயிரத்து 482 பேர் இந்த கொடிய பெருந்தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இதுவரை பாகிஸ்தான் முழுவதும் ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 83 ஆயிரத்து 656 பேருக்கு நோய்த்தொற்றை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நேற்று (மே 24) ஒரே நாளில் 10 ஆயிரத்து 49 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களிடமும் பரிசோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வீட்டுக்கு வழங்குவது; மேலும் பாதிக்கப்படாத மாவட்டங்களில் கடும் சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோய் போன்ற தொற்றுப் பரவல் தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் ஈகை திருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து, கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் ரமலான் தொழுகைக்கு ஒன்றுகூடிய மக்கள்