ETV Bharat / international

கரோனாவும் புலம்பெயர் இந்தியர்களும் - அனில் திரிகுனாயத்

கரோனா சூழலில் புலம்பெயர் இந்தியர்களின் நிலை என்ன? என்பது பற்றி விளக்குகிறது முன்னாள் இந்திய தூதர் அனில் திரிகுனாயத் எழுதிய இத்தொகுப்பு...

COVID-19: Limiting Mindset and Diaspora in Doldrums

author img

By

Published : Apr 29, 2020, 12:56 PM IST

Updated : May 7, 2020, 3:36 PM IST

இயல்பான பரபரப்பு ஏதுமின்றி அசைவற்று முடங்கிப்போய்விட்ட உலகம், அனிச்சை செயல்போல தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19ன் கோர தாண்டவம் எந்த ஒரு நாட்டையும் விட்டுவைக்கவில்லை. வழக்கமான போக்குவரத்து தடைபட்டு, ஒவ்வொரு நாடும் தன் தேச எல்லைகளை மூடி, தன்னையே துண்டித்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. இன்னும் மேலதிகமான கட்டுப்பாடுகள் நம்மை எதிர்நோக்கி உள்ள சூழலில், வெளி நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. சென்ற இடத்தில், வெளிநாட்டில் தவித்துவரும் குடிமக்கள் மற்றும் சிறப்புத் தகுதி அடிப்படையிலானவர்கள் மட்டுமே நாடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர் அல்லது அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு நாடும் தன்னுள் மட்டுமின்றி ஏனைய பிற நாடுகளுடனான எல்லைகளையும் மூடியுள்ளது. உலக நாடுகள் ஊரடங்கில் தொடர, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து தொழில்-வணிகம் அடைபட்டு முடங்கிக் கிடக்கிறது. இந்த குறுகிய காலத்திலேயே, சுற்றுலா மற்றும் பயணம் என்பது பழங்கதையாகிவிட்டது. விமான நிறுவனங்கள், பயண சேவை மற்றும் சரக்குப் போகுவரத்து துறையினர், தங்கள் நாட்டு அரசு சிறப்பு நிதியுதவித் திட்டங்கள் மூலம் தங்களை கைதூக்கிவிடாதா என்ற ஏக்கத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். இந்தச் சரிவிலிருந்து மீண்டுவருவது அரசு உதவியின்றி இயலாது.

இந்த இக்கட்டான நிலையில், தங்கள் குடிமக்களின் மருத்துவ தேவையை சுனக்கமின்றி பார்த்துக்கொள்வதுடன், தொழில்துறையைத் தாங்கிப்பிடித்து பொருளாதாரம் சீரடைவதில் உலகத் தலைவர்களின் நோக்கம் முழுவதும் உள்ளது. இக்காலகட்டத்தில் அமல்படுத்தப்படும் கட்டுப்பாடுகள், மக்கள் பிற நாடுகளுக்கு தொழில்முறையாகவோ, சுற்றூலாவுக்காகவோ தடையற்ற பயணம் மேற்கொள்வதையும் குடியேற்றத்தையும் வெகுவாக பாதிக்கும் என்பது நிதர்சனம்.

இந்த அச்சத்தை உறுதி செய்யும் விதமாக, ஏப்ரல் 22ஆம் தேதியன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்காலிக குடியேற்றத் தடை உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார். “கோவிட்-19 நோய்த்தொற்றுப் பின்னணியில் பொருளாதாரம் மீண்டுவரும் நிலையில், நமது நாட்டு வேலை வாய்ப்பு சந்தையில், அமெரிக்கரின் வேலை வாய்ப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் வரும் வெளிநாட்டவரின் குடியேற்றத்தைத் தடுக்கவே அதிபரின் இந்த ஆணை ” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“உள்நாட்டு வேலை வாய்ப்பின்மை உச்சத்தில் உள்ள சூழலில், வெளிநாட்டுப் பணியாளர்களால் அமெரிக்க வேலை வாய்ப்பு சந்தையில் ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டு, நமது நாட்டின் குடியேற்ற நிர்வாகத்தையும் நெறிமுறைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்பின்மையுடன், வேலைக்கான தேவையும் சுண்டிப்போயுள்ளது. நிலைமை இவ்வாறு மோசமாக இருக்கும்போது, வேலையற்று மிகவும் பின்தங்கியுள்ள அமெரிக்கர்களை பாதுகாத்திட வேண்டும். இருக்கும் சொற்ப வேலைக்கும், வெளிநாட்டில் இருந்து புதிதாக, ஆனால் சட்டப்பூர்வமாக குடியேறுவோரால் ஏற்படும் போட்டியில் இருந்து நம்மவர்களைக் காப்பது இன்றியமையாத ஒன்று. எனவே, விசா வழங்குவதில் தற்போது உள்ள நடைமுறையில் உள்ள போதாமையைப் போக்கவும், கோவிட்-19இன் தாக்கத்தில் இருந்து மீளவும், அது இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். வேறு வழியில்லை. மேலும் புதிய குடியேற்றத்தை அனுமதிப்பது நமது மருத்துவ சேவையின் மீது கூடுதல் பாரத்தை சுமத்தும். நம்மிடம் உள்ள மருத்துவ சேவை முதன்மையாக அமெரிக்கருக்கும், முன்னமே இங்கு குடியேறியுள்ள மக்களுக்குமே உரியது. இதன் அடிப்படையில், எதிர்வரும் 60 நாட்களுக்கு சில அந்நியர்களை குடியேற அனுமதிப்பது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது என்று தீர்மானித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய சூழலில், அமெரிக்க அரசு முன்னரே தற்காலிகமாக நிறுத்திவைத்த விசாக்களை புதுப்பிப்பதற்கு இன்னும் கூடுதல் காலம் ஆகலாம்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள், அவர் அழுத்தமாக கூறிவரும் ‘முதலில் அமெரிக்கா’ என்ற கோஷத்துடன் அவருடைய 2016 தேர்தல் பரப்புரையை ஒட்டியவாறே அமைந்திருப்பது வியப்பல்ல. இத்தகைய நிலைப்பாடு, வரலாற்றையும் யதார்த்தையும் புறந்தள்ளி, அமெரிக்காவின் இன்றைய நிலைமைக்கு குடியேறிய மக்களே காரணம் என்ற முடிவுக்கு வருகிறது. ஆனால், அமெரிக்காவே குடியேறியவர்களின் தேசம்தான் என்பதையும், புலம்பெயர்ந்தோரின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாலேயே அந்நாடு மிகப்பெரும் வல்லரசானது என்ற உண்மை இங்கு வசதியாக மறைக்கப்படுகிறது. இத்தகைய குடியேற்றத்திற்கு எதிரான பேச்சும் செயல்பாடும், அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பிய அரசியல் களத்திலும் இயல்பானதாக தொடர்ந்து வெளிப்படுகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில், தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளின் செல்வாக்கு உயர்ந்து வருவது கவலை தரும் விஷயமாகும். குறுகிய காலத்தில் அரசியல் இலாபம் தருவதென்றாலும், இந்த போக்கு ஆபத்தானதாகும்.

உலகம் முழுக்க, வெற்றிப் பாதையில் கால்பதித்த 30 மில்லியன் புலம்பெயர் இந்தியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRI), இந்திய வம்சாவளியினரும் (PIO), பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். பலர், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அறிவியல், மருத்துவம், தொழில் துறை, விவசாயம், தொழில் முனைவோர் என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்துள்ளனர். சிலிக்கான் பள்ளத்தாக்கில், இந்திய மென்பொறியாளர்களும் நிறுவனங்களும் தரத்தில் தங்கமென நிலைபெற்று, அமெரிக்கா அறிவுசார் பொருளாதாரத்தில் உச்சத்தில் நீடிக்க அடித்தளமாக உள்ளனர். அமெரிக்கா அளிக்கும் H1B சிறப்பு விசா பெறுவோரில் ஆகப் பெரும்பான்மையினர் இவர்களே! இருப்பினும், இந்த விசா பெறுவோரின் எண்ணிக்கையை குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், இந்தியா, அமெரிக்கா இடையே அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பொது வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட புலம்பெயர் இந்தியர், சில நாடுகளில் பிரதமர்களாக, நாட்டின் தலைவர்களாக உயர்ந்திருப்பது, நமக்கு பெருமை தருவதாகும். தற்போதைய இங்கிலாந்து நிதியமைச்சரும், உள்துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியினரே. மேலும், இங்கிலாந்தில் உள்ள டாப் 10 தொழிலதிபர்களில், முதல் தலைமுறை தொழில் முனைவோராக களமிறங்கிய இவர்கள் முன்னணியில் உள்ளனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அங்குள்ள 4 மில்லியன் புலம்பெயர் இந்தியர் குறித்து அதிபர் ட்ரம்ப் வானளவாவப் புகழ்ந்துள்ளார். பிப்ரவரி மாதம், இந்தியா விஜயத்தின் போதும், ஹவுஸ்டன் நகரில் நடைபெற்ற ’ஹ்வ்டிமோடி’ நிகழ்ச்சியிலும் இந்திய வம்சாவளியினர் குறித்து பெருமிதம் தெரிவித்தார். அயல் நாடு வாழ் இந்தியரும், இந்திய வம்சாவளியினரும், இந்தியாவுக்கும் அவர்கள் வசிக்கும் நாடுகளுக்கும் நம்பகமான பாலமாக அமைந்துள்ளனர். முன்பெல்லாம், இந்தியாவில் கல்வி பயின்று அயல் நாட்டில் சேவகம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், மாறிவரும், இன்றைய நவீன காலத்தில் இது ’அறிவின் நம்பிக்கை!

இதே போல, மேற்கு ஆசியாவின் அபரிமிதாமான பொருளாதார வளர்ச்சியிலும் புலம்பெயர் இந்தியரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. வளைகுடா நாடுகளில் உள்ள 9 மில்லியன் புலம்பெயர் இந்தியர், எண்ணெய் வளமிக்க அந்த பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பாக உள்ளனர். திறமைமிக்க வல்லுநர்கள், நிதி மற்றும் வங்கி நிர்வாகிகள், தொழில்முனைவோர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர், துனை மருத்துவ பணியாளர்கள், உடலுழைப்பு தொழிளாளர்கள் என பலதரப்பட்டோரைக் கொண்டது வளைகுடா இந்திய சமூகம். அவர்களது கடும் உழைப்பு, விசுவாசம், கட்டுப்பாடு, அந்த நாடுகளில் அவர்களுக்குப் பெருமையைத் பெற்றுத்தந்து அவற்றின் பிரிக்க இயலாத அங்கமாக உயர்த்தியுள்ளது. இவர்கள் மூலம் இந்தியப் பொருளாதாரம் அடையும் நன்மை குறிப்பிடத்தகுந்தது. ஆண்டொன்றுக்கு 40 முதல் 50 பில்லியன் டாலர் வரை இவர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், வரலாறுகாணாத அளவு சரிந்துவரும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக, இவர்கள் தாயகம் அனுப்பும் பணத்தின் அளவில் பெரும் ஓட்டை விழுவதுடன், பெருமளவு வேலை இழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

கச்சா எண்ணெய் வீழ்ச்சியுடன் கரோனா பெருந்தொற்றும் இணைந்து கொண்டுள்ளதால், வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் 25 முதல் 30 சதம் சரிவைச் சந்திக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, மிகப் பெரிய திட்டங்கள் தள்ளிப்போடப்படலாம் அல்லது இந்த நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க முற்படலாம். இந்த நடவடிக்கைகள், கரோனா-வுக்குப் பிந்தைய முறைமையை முன்வைத்தே அமையும். உலக வங்கியின் ஆய்வுப்படி, கொடிய கரோனா வைரஸ் தாக்கத்தால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர் இந்தியர்களால் அனுப்பப்படும் பணத்தின் அளவு 23 சதம் குறைந்து 64 பில்லியன் அமெரிக்க டாலராக சரியும். 2019ல், இது 83 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சரிவுக்கு முதன்மையான காரணம், புலம்பெயர் தொழிலாளரின் ஊதியம் குறைந்ததே ஆகும். அடுத்ததாக, மேற்காசிய நாடுகளில் தோண்றவுள்ள சமூக பொருளாதார நெருக்கடிகள், தொழிற்சாலைகளில், கட்டுமான நிறுவனங்களில் ஆட்குறைப்பும், பணியாளர்களை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வளைகுடா நாடுகளில் நிறுவனங்களைத் தொ தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர், அரசு ஆதரவின்றி தொடர்ந்து செயல்பட இயலாத நிலைமை ஏற்படும். இந்த விஷ சுழற்சியின் தாக்கமும் போக்கும் எவ்வாறு இருக்கும் என இத்தருணத்தில் கணிப்பது கடினம். ஆனால், இதனை எதிர்கொள்ளும் முகமாக தாயகம் திரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு மறுவாழ்வு, மீள்-பயிற்சி மற்றும் மாற்று வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டங்களை அந்தந்த நாடுகள் செயல்படுத்த வேண்டி அதற்கான தயாரிப்புகளில் இறங்க வேண்டும்.

அயல் நாட்டில் தவித்த தனது குடிமக்களை மீட்பதில், இந்தியாவின் செயல்பாடு உலகிற்கே முன்மாதிரியாக அமைந்தது. ஆயிரக்கணக்கான இந்தியர்களை, கரோனா பாதிப்புக்குள்ளான பிற நாடுகளில் இருந்து உள்நாட்டு கலவரம் உள்ள பிராந்தியங்களில் இருந்தும் பத்திரமாக தாயகம் கொண்டுவந்து சேர்த்துள்ளது இந்திய அரசு.

கோவிட்-19 பின்னணியில், இந்தியாவின் தோழமையை உலகுக்கு வெளிபடுத்தும் விதமாக நமது அண்டை நாட்டுத் தலைவர்களுடனும், G-20 மாநாட்டுத் தலைவர்களுடனும் இணையவழி கலந்துரையாடலை மேற்கொண்டார். இணையவழி ராஜ தந்திரம் மூலம் கரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சி தேவை என்பதை வலியுறுத்தினார் பிரதமர் மோடி. அயல் நாடு வாழ் இந்தியரின் நலனை உறுதி செய்ய, அதிக அளவு புலம்பெயர் இந்தியர் உள்ள நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், இந்திய தூதரகங்கள் அனைத்தும், தங்கள் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான இந்திய மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் உடனடியாக அளிக்குமாறு பணிக்கப்பட்டன.

கோவிட்-19 பெருந்தொற்று தனது ஆட்டத்தை நிறைவு செய்து ஓயும் பொழுது, பொருளாதார தளத்தில் அரசின் தலையீடும் அதன் செயல்பாடும் முன்னைவிட இன்றியமையாததாக அமையும். முன்பு போல இருக்க இயலாது. ஆனால், அரசின் கடிவாளம் கூடுதலாக இறுக்கும் நிலையில், மேலதிக எல்லை கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவது தவிர்க்க இயலாது போகும், மேலை நாடுகளில் குடியேற்றத்துக்கு கிடுக்கிப்பிடி போடப்படும். இதனையொட்டி, சுதந்திரமான போக்குவரத்து தடைபடுவது துரதிர்ஷ்டவசமானது. அப்படிப்பட்ட அதீத கட்டுப்பாடுகள் களையப்படுவது அவசியம். உயர்ந்துவரும் வேலையின்மைக்கு தங்கள் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என்பதை எண்ணிப்பாராமல் புலம்பெயர் தொழிலாளர்களை பலிகடா ஆக்கும் நாடுகள் கூட, இந்த கட்டுப்பாடுகளைக் கைவிடவேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயல்பாடும், பிற சர்வதேச நிறுவனங்களின் நடவடிக்கைகளும், நம்பிக்கை தருவதற்குப் பதிலாக பெரும் ஏமாற்றத்தையே அளிக்கின்றன. எனவே, இந்த சூழலில் இருக்கும் ஒரே வாய்ப்பும் வழியும், தொடர்ந்த தொய்வற்ற இருதரப்பு மற்றும் பலதரப்பு ஆலோசனைகளே.

Last Updated : May 7, 2020, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.