ETV Bharat / international

பெய்ஜிங்கில் மீண்டும் கோவிட்.. மாரத்தான் போட்டி ஒத்திவைப்பு! - சீன

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கோவிட் பரவல் ஏற்பட்ட நிலையில், மாரத்தான் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

China
China
author img

By

Published : Oct 25, 2021, 10:39 AM IST

பெய்ஜிங் : சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து கோவிட்-19 என்னும் புதிய வகை கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனா கோவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி முன்னேறிவந்தது. இதற்கிடையில் தற்போது பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

அங்கு புதிதாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சீனக் குடிமக்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்டது.

இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், “மாரத்தான் போட்டி, தொற்றை கட்டுப்படுத்தும் முனைப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. நகரத்தில் பூஜ்ய கோவிட் பாதிப்பு என்ற நிலையை எட்டுவோம். இந்தப் பாதிப்பும் சுற்றுலாப் பயணிகளால் பரவியிருக்கக் கூடும்” என்றனர்.

COVID-19: After Wuhan, now Beijing marathon postponed as China
சீனா

அக்டோபர் 31 அன்று நடைபெறவிருந்த மாரத்தான் போட்டியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (அக்.24) நடைபெறவிருந்த வூகான் மாரத்தான், கரோனா வைரஸ் குறித்த கவலைகளுக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில் சீனாவில் கரோனா பரவல் 11 மாகாணங்களுக்கு பரவுவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் கரோனா வைரஸ் முதன்முதலில் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இங்கு அக்.24ஆம் தேதி நடைபெறவிருந்த மாரத்தான் போட்டியில் 26 ஆயிரம் பேர் பங்கேற்கவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டு(ம்) ஜிகா.. விமானப் படை ஊழியர் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.