சீனாவின் வூஹான் நகரில் தோன்றி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. சீனாவில் இந்த வைரஸால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 150 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதன்மூலம், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 150ஆகவும் பலி எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 592ஆகவும் உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 148 பேர் பாதிப்பின் மையப்புள்ளியான ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இதனிடையே, தீவிர வைரஸ் பாதிகப்புக்குள்ளாவர்களின் எண்ணிக்கை நேற்று ஒன்பது ஆயிரத்து 915 நபர்களிலிருந்து ஆயிரத்து 915 பேராகக் குறைந்துள்ளது. இதுவரை 24 ஆயிரத்து 734 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா பீதி: இத்தாலியில் உலகப் புகழ்பெற்ற திருவிழா ரத்து!