ETV Bharat / international

கரோனா வைரஸ் : இந்திய மாணவர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு - கொரோனா வைரஸ் உஹான் நகரம் இந்திய மாணவர்கள்

பெய்ஜிங் : சீனாவில் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தங்கி படிக்கும் இந்தியா மாணவர்களின் வசதிக்காக அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ், cornona virus indian students
கொரோனா வைரஸ்
author img

By

Published : Jan 23, 2020, 11:22 PM IST

Updated : Mar 17, 2020, 4:51 PM IST

சீனாவில் 'கரோனா வைரஸ்' என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு, ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான், ஹுனங்காங் நகரங்களில் வசிக்கும் மக்கள் வெளியூருக்குப் பயணிக்கக்கூடாது என தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, இந்த நகரவாசிகள் வீடுகளில் முடங்கிக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உஹான், அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் தங்கி சீன பல்கலைக்கழகங்களில் படித்தி வரும் 700-க்கும் அதிகமான இந்திய மாணவர்களின் கதி குறித்து கவலை எழுந்துள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு சீனாவில் உள்ள இந்திய தூதரகம் மாணவர்களுக்கென அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், ஹுபெய் மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்களும், இந்தியாவில் வாழும் அவர்களது குடும்பத்தினரும் தூதகரகத்தை தொடர்ந்து தொடர்புகொண்டு வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்கள் குறித்தும், சீனாவில் நிலவிவரும் சூழல் குறித்தும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருவதாக சீன அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.

சூப்பர் மார்கெட்டுகள் (குறிப்பாக அரசின் மேற்பார்வையில் இயங்கி வருபவை), மின் வணிக (E-commerce) சேவை உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

உதவிக்கு +8618612083629, +8618612083617 ஆகிய அவசர எண்ணகள் மூலம் இந்திய தூதரகத்தை அணுகலாம். தொடர்ந்து இந்திய தூதகரத்தின் சமூக வலைதள அக்கவுன்டுகளுடன் (Twitter:@EoIBeijing; Facebook: India in China) பார்த்து வாருங்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உலகை அச்சுறுத்தும் கரோனா வைரசை அறிவோ

Last Updated : Mar 17, 2020, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.