சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டன.
சீனாவில் இதுவரை கொரோனா தொற்றால் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சுகாதார அவசரநிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. பலர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கொரோனா தொற்று: கேரள மாணவி மருத்துவமனையிலிருந்து விடுவிப்பு!