ETV Bharat / international

வூஹானை குறைந்த ஆபத்துள்ள மண்டலமாக அறிவித்தது சீனா!

பெய்ஜிங்: கோவிட்-19 தொற்று முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரைக் குறைந்த ஆபத்துடைய மண்டலமாகச் சீனா அறிவித்துள்ளது.

Wuhan
Wuhan
author img

By

Published : Apr 19, 2020, 1:14 PM IST

உலகையே ஆட்டிப்படைத்துவரும் கோவிட்-19 வைரஸ் தொற்று முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் என்ற நகரில் கண்டறியப்பட்டது. இங்குள்ள காட்டு விலங்குகளை விற்கும் சந்தையிலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வூஹான் நகரில் வைரஸ் தொற்று வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு மோசமாக அதிகரித்தது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், அந்நகரை அதிக ஆபத்துடைய மண்டலமாகவும் சீனா அறிவித்தது.

சீனாவின் மாநில கவுன்சில் வழிமுறைகளின்படி, எந்தவொரு மாகாணத்திலும் நகரிலும் குறைந்தபட்சம் 14 நாள்களுக்கு யாரும் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றால் அது குறைந்த ஆபத்துடைய மண்டலமாக அறிவிக்கப்படும்.

அதேபோல 14 நாள்களில் 50-க்கும் குறைவான பாதிப்புகள் கண்டறியப்படும் இடங்கள் நடுத்தர ஆபத்துடைய மண்டலங்களாகவும் 50-க்கும் அதிகமான பாதிப்புகள் உறுதிசெய்யப்படும் இடங்கள் அதிக ஆபத்துடைய மண்டலங்களாகவும் அறிவிக்கப்படும்.

அதன்படி வூஹான் நகரில் கடந்த 14 நாள்களாக வைரஸ் பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளதால் அந்நகரை குறைந்த பாதிப்புடைய மண்டலமாக ஹூபே மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் 12 நாள்களுக்கு முன்தான் ஊரடங்கு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஹூபே மாகாணத்தில் 76 நகரங்களும் கிராமங்களும் குறைந்த ஆபத்துடைய மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 16ஆம் தேதிவரை வூஹான் நகரில் 50 ஆயிரத்து 333 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,969 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் கோவிட்-19 தொற்று குறித்து தவறான தகவல்களைச் சீனா அளித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறையின் ஜாவோ, "தொற்றுகள் ஏற்படும்போது முதலில் அறிவிக்கப்பட்ட தரவுகளைத் திருத்துவது என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

வைரஸ் பரவ ஆரம்பித்தபோது சில தகவல்கள் தாமதமாகவும் சில தகவல்கள் தவறானதாகவும் இருந்தன. அதைத்தான் நாங்கள் தற்போது திருத்தியுள்ளோம். ஆனால், தரவுகள் ஒருபோதும் மறைக்கப்படவில்லை. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்" என்றார்.

சீனாவில் இதுவரை கோவிட்-19 தொற்று காரணமாக 82 ஆயிரத்து 735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77 ஆயிரத்து 62 முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1041 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 4,632 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: மூவர்ணக் கொடி போர்த்திய ஆல்ப்ஸ் மலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.