உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவில்தான் முதலில் பரவத் தொடங்கியது. இந்தத் தொற்று உலகத்தில் பல மக்களுக்கு பரவியது மட்டுமல்லாமல் பல உயிர்களையும் காவு வாங்கியது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கரோனா தொற்று நோயின் பிறப்பிடமாக இருந்த சீனா வூஹான் நகரத்தில் 76 நாட்கள் கழித்து தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. தற்போது மக்கள் முகமூடி அணிந்தவாறு இயல்பாக நடமாடத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிகழ்வானது யாங்சே ஆற்றின் இருபுறமும் உள்ள வானளாவிய கட்டடங்கள், பாலங்கள் மேல் நோயாளிகளுக்கு உதவிய சுகாதார ஊழியர்களின் அனிமேஷன் படங்களை லேசர் ஒளி மூலம் அடிக்கப்பட்டது.
அதோடு ‘வீர நகரம்’ வாசகமும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த பெயர் வூஹான் நகரத்திற்கு சீன அதிபர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி ஜின்பிங் வழங்கினார். பின்னர் சீன அதிபர் கொடி அசைத்து ’வூஹான் போகலாம்’ என்று கூறி தேசிய கீதமான கேபெல்லா பாடலை பாடினார்.
இந்தக் காட்சியை உணர்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்த டோங் ஜெங்க்குன் என்ற ஒருவர் கூறுகையில், ”என்னால் 70 நாட்கள் வெளியே வர முடியவில்லை. நான் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த முழு கட்டடம் மூடப்பட்டது. என் அத்தியாவசிய பொருட்களைக்கூட அக்கம் பக்கத்திலுள்ள தொழிலாளர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள்” என்றார்.
இந்த நகரத்தில் 82,000 க்கும் மேற்பட்ட கரோனா தொற்று வழக்குகள், 3,300 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் சமீபத்திய வாரங்களில் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளன, ஏனெனில் புதிய வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய வழக்குகள் எதுவும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.
ஊரடங்கு முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே, சுமார் 65,000 பேர் ரயில், விமானம் மூலம் மட்டும் நகரத்தை விட்டு வெளியேறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்காக சாப்ட்வேர் உருவாக்க உத்தரவு!