ஐந்தாண்டுகளில் சீனா தன்னம்பிக்கை கொண்ட தொழில்நுட்ப சக்தியாக மாறும்! - china tech power
அமெரிக்காவுடனான மோதல்களால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்ப உதிரிபாகங்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு சீனாவுக்கு விதித்துள்ளது. இதனைக் களையவும், தங்கள் நாட்டை தொழில்நுட்பத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றவும் ஆளும் கட்சி உறுதிபூண்டுள்ளது.
பெய்ஜிங்: தங்களின் ஐந்தாண்டுத் திட்டம், சீனாவின் வளர்ச்சியை மேம்படுத்தி, நாட்டை தவிர்க்கமுடியாத தொழில்நுட்ப சக்தியாக மாற்ற துரிதப்படுத்தும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூறினர்.
அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் அரசு ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரத்திற்கான வளர்ச்சியின் வரைபடத்தை உருவாக்குவதற்கான கூட்டம் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர், நாட்டை தவிர்க்கமுடியாத தொழில்நுட்ப சக்தியாக மாற்ற துரிதப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தலைவர்கள் அறிவிப்பை வெளியிட்டனர்.
"முன்னெப்போதையும்விட தொழில்நுட்ப தீர்வுகள் சீனாவுக்குத் தேவைப்படுகிறது. முன்னெப்போதையும்விட கண்டுபிடிப்புகளை வலுப்படுத்த வேண்டும்" என்று சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஜிகாங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்களின் படைப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் கண்டு வெள்ளை மாளிகை பொறாமைப்படுவதாக கூறினார். தங்கள் படைப்புகளில் தடையிட்டு, அதனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் வெள்ளை மாளிகை இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்த அவர், இந்த நிலை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றார் வாங்.