சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவருகிறது.
இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 425 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். மேலும், 20,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 10 நாள்களில் புதிய மருத்துவமனையையும் சீனா கட்டியுள்ளது. மேலும், கரோனா தொற்று வேகமாக பரவுவதைத் தடுக்க சீனா பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாடத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.
மேலும், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சீனர்களுக்கும் சமீபத்தில் சீனா சென்று வந்தவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துவருகிறது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் - சீனாவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு!