சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தொற்றால் எற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஹூபே மாகாணத்தில் 94 பேர் கொரோனா என்ற அழைக்கப்பட்டு வந்த கோவிட்-19 வைரஸூக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், சீனாவில் கோவிட்-19 வைரஸூக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,113ஆக உயர்ந்துள்ளது.
ஹூபேயின் சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய மாகாணத்தில் மேலும் 1,638 புதிய நபர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் முன்னர் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சீனா முழுவதும் இப்போது 44 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் ஹூபேயின் தலைநகரான வுஹானில் காட்டு விலங்குகளை விற்கும் சந்தையில் கடந்த ஆண்டு தோன்றியதாக நம்பப்படுகிறது.
ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் உலக சுகாதார அமைப்பானது, இந்த கொடூர நோய்க்கு 'கோவிட்-19' என அதிகாரப்பூர்வமான பெயரை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரோஹிங்யா அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 16 பேர் பலி