ETV Bharat / international

மறைமுகப்போரில் ஈடுபடும் எண்ணத்தை கைவிடுங்கள் - அமெரிக்கா மீது சீனா தாக்கு

பெய்ஜிங்: சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு மறைமுகப் போரில் ஈடுபடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

author img

By

Published : May 23, 2020, 4:20 PM IST

Trump
Trump

சீனா - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக வர்த்தகப் போர் நிலவிவரும் நிலையில், தற்போது கரோனா தாக்கம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் பூசல் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா விவகாரம் தொடர்பாக சீனாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ச்சியாக சாடிவருகிறார்.

மேலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க பங்குச் சந்தையில் முறைகேடுகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டை அமெரிக்க மேலவை உறுப்பினர் ஜான் கென்னடி முன்வைத்தார். அவர், சீன பெரு நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யவும், அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து நிதித் திரட்டவும் தடை விதிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

மேலும், சீனாவில் உய்கர் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதை கண்டித்தும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துவருகிறது. இந்த நடவடிக்கைகளால் காட்டமான சீன அரசு தற்போது பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சாஹே லிஜான் கூறுகையில், "சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அமெரிக்காவின் இந்த செயல்பாடு மறைமுகப் போர் போலத் தோற்றமளிக்கிறது. இது இரு நாட்டு உறவுகளை தேவையின்றி பின்னடைவை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தந்தையைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு; தீர்ப்பைக் கடவுள் பார்த்துக்கொள்வார்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.