சீனாவின் வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான லியாவ்நிங்கில் அமைந்துள்ளது கையூவான் நகரம்.
இங்கு, நேற்று மாலை சரியாக 5:22 மணிக்கு ( உள்ளூர் நேரம்) சக்திவாய்ந்த சூறாவளி வீசியது. மணிக்கு 82.8 கி.மீ வேகத்தில் நகர்ந்த இந்த சூறாவளி சுமார் 15 நிமிடம் வீசியது.
அப்போது, சூறாவளியில் சிக்கி தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மின் கம்பங்கள் ஆகியவை சேதமடைந்ததாக ஜிங்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அதில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 190 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோன்று, கட்டட இடிபாடுகளிலிருந்து 210 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நகர மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அரசாங்கம் ஆய்வு மேற்கொண்டுவருகிறது.