கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதையொட்டி அரசின் மூன்று முகமைகள் வனவிலங்கு வர்த்தகத்துக்கு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர். உஹான் மாநகரில்தான் இந்த வைரஸ் மிகத் தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து பரவுகிறது.
இந்நிலையில், வனவிலங்கு வர்த்தகத் தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை, இணையதளம் என எதன் மூலமாகவும் வனவிலங்குகளை வாங்கவோ விற்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களின் உடமைகளுக்கு சீல்வைக்கப்படும். நாட்டில் வைரஸ் பரவுவது ஓய்ந்து சுமுகமான நிலை திரும்பும்வரை இந்தத் தடை இருக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து புகாரளிக்க தனித்துவமான தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வனவிலங்கு இறைச்சியை உண்ண வேண்டாம் என அரசு முகமைகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை வைரஸால் 56 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 1,975 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் உஹான் மாநகரைச் சுற்றியுள்ள 16 நகரங்களிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: சீனாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு!