சீனா ஆராய்ச்சியார்கள் புதிதாக உருவாக்கியுள்ள காஃபென் -14 (Gaofen-14) செயற்கைக்கோள், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தித்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள், லாங் மார்ச் -3 பி கேரியர் ராக்கெட் மூலம் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது.
காஃபென் -14 ஒரு ஆப்டிகல் ஸ்டீரியோ மேப்பிங் செயற்கைக்கோள் ஆகும். இதன் மூலம், நிலப் பொருட்கள் மிகவும் துல்லியமாக ஹை குவாலிட்டியில் படம்பிடித்திட முடியும். புவியியல் தொடர்பான தகவல்களையும் கொடுக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
முன்னதாக, நிலவில் தரையிறங்கிய சீனா அனுப்பிய ஆளில்லா விண்கலத்திலிருந்த ரோவர், சீன விண்வெளி விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டிருந்த சீன தேசிய கொடி நிலவின் மேற்பரப்பில் நாட்டப்பட்டது. இதன் மூலம், நிலவில் அமெரிக்கா கொடி ஏற்றி சுமார் 50 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது இரண்டாவது நாடாக சீனா தன் நாட்டின் கொடியை ஏற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.