ETV Bharat / international

பெரும் காட்டுத் தீ : கரோனாவைத் தொடர்ந்து அடுத்த சிக்கலில் அவதியுறும் சீனா!

பெய்ஜிங் : தென்மேற்கு சீனா மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக சீன அரச ஊடகம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

China state media reports 19 people killed in forest fire
பெரும் காட்டுத்தீ : கரோனாவைத் தொடர்ந்து அடுத்த சிக்கலில் அவதியுறும் சீனா!
author img

By

Published : Mar 31, 2020, 8:11 PM IST

தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் ஜிச்சாங் நகரை அடுத்துள்ள லூஜி மலையை உள்ளடங்கிய வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் மக்கள் அலுவலர்களை தொடர்புகொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு விரைந்து வந்த தொழில்முறை தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் உள்ளடக்கிய 1000க்கும் மேற்பட்டோர் தீயணைக்கும் பணியில் இறங்கினர். அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அவசர கால அடிப்படையில் அங்கிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த காட்டுத் தீயால் பல கிராமங்கள், ஒரு பள்ளி, ஒரு ரசாயன ஆலை உள்ளிட்டவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சீன அரசின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தால் அச்சுறுத்தப்பட்ட பகுதி லூஜியில் இருந்து எத்தனை பேர் இதுவரை வெளியேற்றப்பட்டனர் என்பது குறித்து எந்த எண்ணிக்கையும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து சிச்சாங் நகரைச் சேர்ந்த அரசத் தகவல் அலுவலர் கூறுகையில், “நேற்று பிற்பகல் ஒரு பண்ணையில் ஏற்பட்ட தீ, பலத்த காற்று காரணமாக அருகிலுள்ள மலைகளுக்கு விரைவாக பரவியது என சொல்லப்படுகிறது. இறப்புகள் எப்போது நிகழ்ந்தன என்பது சரியாக தெரியவில்லை, ஆனால் இறந்தவர்களில் ஒருவர் காட்டுப்பாதையின் வழிகாட்டி என அறிய முடிகிறது. மீதமுள்ள 18 பேரும் தீயணைப்பு வீரர்கள்”என அவர் தெரிவித்தார்.

பெரும் காட்டுத்தீ : கரோனாவைத் தொடர்ந்து அடுத்த சிக்கலில் அவதியுறும் சீனா!

தீயணைப்புப் பணிகளில் ஈடுபட பிற நகரங்களில் இருந்து மேலும் 885 தீயணைப்பு வீரர்கள் அங்கு மீட்புப்பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 142 தீயணைப்பு இயந்திரங்கள், தீயணைப்பு உபகரணங்கள், 6 தீ விபத்தை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் காட்டுத் தீ பரவும் இடத்திற்கு விரைந்துள்ளன.

தீவிரமடைந்து வரும் தீப்பிழம்புகளை எதிர்க்கொள்வதோடு, குடியிருப்பு மக்களை வெளியேற்றவும், முக்கிய தொழில்துறை உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் அந்தப் படைகள் பயன்படுத்தப்படும் என மாகாண அரசு தரப்பு கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு இதே பகுதியில், கரடுமுரடான காடுகள் நிறைந்த மலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல நாடுகளைப் போலவே, சீனாவும் பருவநிலை மாற்றம், காட்டுயிர் வாழ்விட அழிப்பு, வனப்பகுதிகளில் மனிதர்கள் அத்துமீறல் ஆகியவற்றின் விளைவாக அதிக எண்ணிக்கையிலான ஆபத்தான காட்டுத் தீ விபத்துக்களை எதிர்க்கொண்டு இருக்கிறது. தரநிலையில் பலவீனமான தொழில்துறை பாதுகாப்பும் அமலாக்கங்களும் அடிக்கடி ஆபத்தான விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன.

இதையும் படிங்க : சமூக விலகல்: அமெரிக்காவில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.