ETV Bharat / international

’இந்தியாவின் செயல் கவலையளிக்கிறது’ - 59 செயலிகள் தடை செய்யப்பட்டது குறித்து சீனா! - 59 சீன செயலிகளுக்கு தடை

பெய்ஜிங் : சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

India's ban on 59 Chinese apps
India's ban on 59 Chinese apps
author img

By

Published : Jun 30, 2020, 5:25 PM IST

இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராகவும் இந்தியர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையிலும் செயல்படுவதாகக் கூறி 59 சீன செயலிகளுக்கு மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திங்கள் கிழமை (ஜூன் 29) தடை விதித்து உத்தரவிட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "இந்தியா விதித்துள்ள இந்தத் தடை நோட்டீஸ் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாங்கள் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.

சீன அரசு எப்போதும் சீன தொழிலதிபர்களிடம் சர்வதேச விதிமுறைகளையும், அந்நிறுவனங்கள் செயல்படும் நாடுகளின் உள்ளூர் சட்டங்களையும் முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும், சீனர்கள் உட்பட அனைத்து சர்வதேச முதலீட்டாளர்களின் நியாயமான சட்ட உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது உண்மையில் பரஸ்பர நன்மை அளிக்கும். இதன் மூலம் இரு தரப்பும் அடையக் கூடிய நன்மைகளே அதிகம்" என்றார்.

டிக்டாக், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது, சீன டெக் நிறுவனங்களுக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து அதிக பயனாளர்களைக் கொண்டிருந்த டிக்டாக் செயலியின் வருவாய் இந்த தடையால் வெகுவாக பாதிக்கப்படும்.

இதையும் படிங்க: டிக்டாக் தடை எதிரொலி - ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பதிவிறக்கம் கண்ட இந்தியாவின் ’சிங்காரி’!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.