ETV Bharat / international

11 அமெரிக்க உயர் அலுவலர்களுக்கு தடை - சீனா பதிலடி

பெய்ஜிங்: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக சர்ச்சையைக் கிளப்புவதாகக் கூறி 11 அமெரிக்க உயர் அலுவலர்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.

Beijing
Beijing
author img

By

Published : Aug 10, 2020, 10:23 PM IST

ஹாங்காங், உய்குர் இஸ்லாமியர்கள் அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீனா, அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை சீனா அமல்படுத்தியது.

இது ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல் எனக் கூறி அமெரிக்க அரசு 11 சீன உயர் அலுவலர்கள் மீது தடை நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன அரசு அமெரிக்க மேலவை அலுவலர்கள் உள்ளிட்ட 11 உயர் அலுவலர்கள் மீது தடை நடவடிக்கையை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் வசிக்கும் உய்குர் இஸ்லாமியர்கள் மீது அந்நாடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவரும் காரணமாக அந்நாட்டின் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துவருகிறது. இதற்கு தக்க பதிலடி தரும் விதமாக சீனாவும் தற்போது தடை நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹிந்தியில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய ஈரான் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.