அமெரிக்காவும் சீனாவும் தொடர்ச்சியாக வர்த்தகப்போரில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு இருநாடுகளுக்கும் இடையில் கூடுதல் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை மையம்கொண்டு தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை கடுமையாகத் தாக்கிவருகிறது.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறித்து செய்தி சேகரிக்கும் சீன செய்தியாளர்களிடம் அமெரிக்க அரசு தொடர்ச்சியாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இது சீன அரசை கடுமையாகச் சீண்டியுள்ளது.
இதற்குப் பதிலடி அளிக்கும்விதமாக சீனாவில் இயங்கும் முன்னணி அமெரிக்க செய்தி நிறுவனங்களான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜார்னல், வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு கடும் நெருக்கடிகளை சீன அரசு தற்போது விதித்துள்ளது.
தங்கள் நாட்டு செய்தியாளர்களை வேண்டுமென்றே அவமதிக்குவகையில் செயல்பட்டுள்ள அமெரிக்கா, தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில் இந்தப் பதிலடி நடவடிக்கைகள் தொடரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை கரோனா காலி செய்துவிடும்' - இம்ரான் கான்