சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் சீனா பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவரும் வேளையில், அந்நாட்டில் மீண்டும் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் யாங்சே நதிப் பகுதியில் ஒரு மாத காலமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி சுமார் 28 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், இதுவரை வெள்ளத்தால் 141 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் அதிகப்படியானோர் மாயமாகியுள்ளனர்.