கொரியப் போரில் சீன நுழைந்ததன் 70 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (அக். 26) அனுசரிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து சீனாவின் சார்பில் போரிட்டு உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு தனது மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், "ஆக்கிரமிப்புப் போரைத் தடுக்க, படையெடுப்பை முறியடிக்க நாம் கடந்த காலங்களில் போராடினோம். இனியும் போராடுவோம். படையெடுப்பாளர்களின் ஆற்றலை களத்தில் அதே ஆற்றலோடு நாமும் சந்திக்க வேண்டும். மக்களின் உரிமையை வெற்றிப்பெற அது மட்டுமே தேவை என்பதை கொரியப் போர் நமக்கு காட்டும்.
இந்தக் கொரியப் போர் ஆண்டு விழாவில் ஒரு சீனத் தலைவர் ஒரு முக்கிய உரையை வழங்கியது 2000 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாகும்.
ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் இவற்றுக்கு எதிரான கொரியப் போரில் சீன மக்கள் அரசின் பங்களிப்பே அது.
சர்வதேச அளவில் ஏகாதிபத்தியற்கு எதிராகப் போராடும் வகையில் சீன மக்கள் இப்போது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர் என்பதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள் என்ற புரட்சியாளர் மாவோவின் கூற்றை நாம் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறோம்" என உற்சாகப்படுத்தினார்.