சீனாவில் 1970ஆம் ஆண்டுகளில் குடும்பத்திற்கு ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் அமலில் இருந்ததால், பெற்றோர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டு பெண் குழந்தையை கருவிலேயே அழித்துவிட்டனர்.
இதையடுத்து சீனாவில் ஆயிரம் ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு பெண்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்த ஆயிரம் ஆண்களில் கடந்த ஆண்டு மட்டும் 7 ஆண்களுக்குதான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் ஆகாத சிங்கிள்ஸ்களுக்கு என்று காதல் ரயிலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செங்க்டு ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து ஆண், பெண் இருவரும் இந்த ரயிலில் 2 பகல், 1 இரவு பயணிக்கலாம். தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவை ரயில்வே நிர்வாகமே வழங்கும்.
இந்த ரயிலில் பயணிக்கும் ஆண், பெண் எவராயினும் அவர்களது விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு துணையை அமைத்துக் கொள்ளலாம், அதன் பின் அந்த உறவை திருமணத்தில் இணைத்து கொள்ளலாம். இந்த ரயில் பயணம் மூலம் காதலர் இல்லாதவர்களுக்கு காதலர் கிடைத்துவிடுவர், அதேபோல் திருமணமும் நடைபெற்றுவிடும். மேலும், காதல் ரயில் தொடங்கி மூன்று ஆண்டுகளில் இதுவரை 10 ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.