ETV Bharat / international

உலகின் 2ஆவது பெரிய நீர் மின் திட்டத்தை தொடங்கிய சீனா - சீனா பைஹிதான் நீர் மின் நிலையம்

சுமார் 2.52 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீர்மின் உற்பத்தித்திட்டத்தை சீனா செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

hydropower station
hydropower station
author img

By

Published : Jun 28, 2021, 7:48 PM IST

உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீர்மின் உற்பத்தித்திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது. தென் மேற்கு சீனாவில் 948 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைஹிதான் நீர் மின் நிலையம் இன்று (ஜூன் 28) முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

ரூ.2.52 லட்சம் கோடியில் மெகாத் திட்டம்

மொத்த 16 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த மின் நிலையத்தில், ஒரு நாள் மின் உற்பத்தி சுமார் ஐந்து லட்சம் பேருக்கு ஆண்டு தோறும் தேவையான மின் தேவையை பூர்த்தி செய்யும்.

சீனாவின் யாங்கீஸ் நதியில் இந்த நீர்மின்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 2.52 லட்சம் கோடி ரூபாயாகும்.

கால நிலை மாற்றத்தை தடுக்க, மாற்று எரிசக்தி முறையை சீனா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. 2060 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் இலக்குடன் சீனா அரசு செயல்பட்டு வருகிறது.

அதேவேளை, நதியின் குறுக்கே இத்தகைய பிரம்மாண்ட திட்டத்தை செயல்படுத்துவது சூழியல் சார்ந்த பின்னடைவுகளை ஏற்படுத்தி, அரிய உயிரினங்களுக்கு பாதிப்பு தரும் என சூழியல் ஆர்வலர்களிடமிருந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தடுப்பூசி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏழை நாடுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.