செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தியான்வென்-1 விண்கலத்தை சீனா அனுப்பியது. இந்த விண்கலம், ஹென்ன தீவிலிருந்து ஏவப்பட்டது. ஆறு சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இதன் எடை சுமார் 240 கிலோ ஆகும்.
இந்நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இதில் படங்களை எடுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறையின் தன்மைகள், நீரின் தன்மை ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. சுமார், மூன்றரை மாதம் இந்த விண்கலம் விண்வெளியில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.