கோவிட்-19 வைரசின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் நோய்த்தொற்று தொடர்பான பெரும்பாலான தகவல்கள் மறைக்கப்பட்டதாக உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இது தொடர்பாக உலக சுகாராத அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த மே மாதத்தில் அந்நாட்டின் கோவிட்-19 நிலவரம் தொடர்பாக உண்மை செய்திகளை நேரலை மூலம் வெளியிட்ட ஷாங் ஷான் என்ற பெண்ணுக்கு அந்நாட்டு அரசு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 37 வயதான இவர், வழக்கறிஞராவார். இவரை கடந்த மே மாதமே கைது செய்த சீன அரசு, முறையான விசாரணைக்கு இவருக்கு வாய்ப்பளிக்கவே இல்லை.
சீனாவின் நீதித்துறை எந்தவித வெளிப்படைத் தன்மையும் இன்றி தனது விசாரணையை மேற்கொண்டு, நியாமற்ற தீர்ப்பை வழங்கியுள்ளதாக ஷாங் ஷான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கடலில் மூழ்கிய ரஷ்ய படகு - 17 பேர் மாயம்