'இந்தியாவின் முயற்சிகளுக்கு சீனா மதிப்பளிக்கவில்லை' - இந்தியா சீன லடாக் எல்லை மோதல்
வாஷிங்டன்: இந்திய-சீன இடையே தற்போது நிலவிவரும் எல்லைப் பிரச்னை, எல்லைப் பகுதிகளில் அமைதியைக் காக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு சீனா சிறிதும் மதிப்பளிக்காததைக் காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கை உருவாக்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
லடாக்கில் இந்திய-சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒருமாதமாக மோதல் போக்கு நிலவிவருகிறது. இதன் காரணமாக, இருநாடுகளும் தங்களது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்றுக்கு இடையே எழுந்துள்ள இந்த எல்லை விவகாரம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள கார்னிகி என்டவுமென் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் என்ற வெளியுறவுக் கொள்ளை உருவாக்க நிறுவனத்தைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் என்பவர் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய-சீன இடையே தற்போது நிலவிவரும் எல்லைப் பிரச்னை, எல்லைப் பகுதிகளில் அமைதியைக் காக்கும் இந்தியாவின் முயற்சிக்கு, சீனா சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கொண்டுவந்த மாற்றங்களைச் சீண்டலாக எண்ணி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அதன் எல்லைகளை வலுக்கட்டாயமாக விரிவாக்கும் முயற்சியை சீனா மேற்கொண்டுள்ளது.
இதனால், சீனாவின் எல்லை விரிவாக்கத் திட்டங்களை எவ்வாறு முறியடிப்பதென, மற்ற ஆசிய நாடுகளைப் போன்று திட்டமிடும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய எல்லைப் பகுதிகளை, அந்நாடு மீட்க வேண்டும் என்றால், ஒன்று ராணுவத்தைக் கொண்டு சீன ராணுவத்தை விரட்டியடிக்க வேண்டும். இன்னொன்று சீனாவைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கேரளாவில் யானையோடு பழகும் குழந்தையின் வைரல் வீடியோ