இது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் எழுதியுள்ள கட்டுரையில், "எனது அனுபவத்திலிருந்து, அமெரிக்க மக்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இன்று அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா உள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதாரம், ராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே சீனாவின் இறுதி இலக்கு. இந்த வளர்ந்துவரும் ஆதிக்கத்தை அமெரிக்கா உரிய முறையில் சமாளிக்க வேண்டும்.
அறிவுசார் சொத்து திருட்டு காரணமாக சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருளாதாரத்தை சீனா நாசப்படுத்துகிறது. மேலும், திருடப்பட்ட தொழில்நுட்பத்தால் உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. சீனாவிலுள்ள அனைத்து முக்கியத் தனியார் நிறுவனங்களுக்குப் பின்னாலும் கம்யூனிஸ்ட் கட்சியே உள்ளது" என்று கூறியுள்ளார்.
சீனாவுக்கு எதிராக வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் ட்ரம்ப் நிர்வாகம் மிகக் கடுமையான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் பைடன்!