ETV Bharat / international

சமூக இடைவெளியுடன் முத்தப் போட்டி... கடை திறப்பில் ருசிகரம்!

author img

By

Published : Apr 22, 2020, 10:36 AM IST

பெய்ஜிங்: ஊரடங்கு முடிந்து மீண்டும் கடையை திறப்பதை கொண்டாடுவதற்காக நடைபெற்ற முத்தப் போட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

sd
dsdsd

சீனாவின் வூஹான் பகுதியில் முதன் முதலாக அறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று நோய், மின்னல் வேகத்தில் உலக நாடுகளைத் தாக்கியது. இந்த வைரஸை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. சுமார் மூன்று மாதங்கள் கரோனாவால் ஒடுங்கியிருந்த சீன நாடு, தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது. பல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவில் சுஜோ (Suzhou) நகரில் இயங்கிவரும் யுய்யா (Yueya) தொழிற்சாலை கரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. திறப்பு விழாவில் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், முத்தப் போட்டியை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, முத்தப்போட்டியில் 10 ஜோடிகள் கலந்துகொண்டனர். கரோனா தற்காப்புக்காக ஜோடிகளுக்கு நடுவில் ப்ளெக்ஸிகிளாஸ் (plexiglass) வைக்கப்பட்டது மட்டுமின்றி, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

  • #China A furniture factory in Suzhou, Jiangsu had a "Kissing Contest" to celebrate the factory resuming work.

    The organisers said this event can help the factory workers relax & there's a transparent glass between the kissers.

    Allegedly some of the participants are not couples. pic.twitter.com/9BWWpBkaAs

    — W. B. Yeats (@WBYeats1865) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து தொழிற்சாலை முதலாளி கூறுகையில், "இதில் பங்கேற்ற சில ஜோடிகள் திருமணம் ஆனவர்கள்தான். அவர்களும் தொழிற்சாலையில்தான் வேலை செய்கின்றனர். இந்த கரோனா தொற்று அனைவரையும் அச்சுறுத்தியுள்ளது. இதனால், வேலையில் எதாவது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்தான், முத்தப் போட்டி நடத்தி ஊழியர்களை மகிழ்ச்சிடைய செய்தோம்" என்றார்.

தற்போது, முத்தப் போட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இதையும் படிங்க: '26 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகளை, ரூ. 41ஆயிரத்துக்கு விற்ற ஹேக்கர்கள்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.