ETV Bharat / international

இணையத்தில் மேலாதிக்கம் செலுத்த நினைக்கும் சீனா - இணையத்தில் சீனாவின் ஆதிக்கம்

சீனாவின் தீங்கிழைக்கும் தந்திரங்களை மிகவும் ஆழமாக பார்க்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. நெட்டிசன்களை வலுகட்டாயமாக வேறு ஒரு நெட்டுக்கு மாற வைக்கக் கூடியதாக இருக்கலாம். ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை விரிவாக்கத்திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் இன்டர்நெட் மரபில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சீனாவின் நோக்கம் ஆக்கப்பூர்வமானதாகத் தோன்றலாம்.

சீனா
சீனா
author img

By

Published : Jan 20, 2021, 8:13 PM IST

இணையத்தின் வருகையால் உலகின் நடைமுறையானது தீவிர மாற்றங்களுக்கு உட்பட்டதாகி விட்டது. தகவல் தொழில்நுட்பம், ஆளுகை, போக்குவரத்து, சுற்றுலா, பொழுதுபோக்கு ஆகிய துறைகளிலும் மக்களின் தினசரி வாழ்க்கையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அர்பாநெட் (ARPANET) என்ற அமைப்பைத் தொடங்கிய பிறகு இணையதள இணைப்பானது உலகம் முழுவதும் சீராக வளர்ச்சி பெற்றுள்ளது.

சீனா ராணுவ வீரர்கள்
சீனா ராணுவ வீரர்கள்

சுதந்திரமான இணைப்பு மற்றும் நடுநிலை ஆகியவை இணையம் புகழ் பெற்றதற்கு முக்கியமான காரணங்களாகும். ஒவ்வொருவரிடமும் இன்டர்நெட் இருந்தபோதிலும் அதன் மீது யார் ஒருவருக்கும் எந்த ஒரு அதிகாரமும் இல்லை. ஆனால், சீன அரசானது முழுமையாக இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் லட்சியத்தை நோக்கி விரைவாக நடைபோட்டு வருகிறது. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச தொலைத்தொடர்பு கருத்தரங்கு நடந்தது. ஏற்கனவே உள்ள இன்டநெட் மரபில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு மனுவில் சீனாவின் அரசு நிறுவனமான சீனாயூனிகாம் உடன் ஹூவாய் என்ற சீனாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமும் இணைந்து கையெழுத்திட்டுள்ளன. இது இன்டர்நெட்டை ஒரு திட்டமிட்ட முறையில் கட்டுப்படுத்தும் சீனாவின் உத்தி என இணைய வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சீனா
சீனா

இப்போதைய இன்டர்நெட் மரபு என்பது டிரான்ஸ்மிஷன் கன்ட்ரோல் புரோட்டக்கால்/இன்டர்நெட் புரோட்டக்கால் (டி.சி.பி / ஐ.பி)என பொதுவானதாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள் இந்த முறையில்தான் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு இணைப்பில் அல்லது ஒரு கம்ப்யூட்டர் தொடர்புடைய ஐபி என்ற அடையாள எண்ணுடன் இருக்கும்போது டிசிபி தகவல்களை அனுப்பும். டி.சி.பி / ஐ.பி-யில் பின்னடைவு என குறிப்பிட்டு, புதிய மரபை சீனா முன் வைத்துள்ளது.

ஏற்கனவே உள்ள மரபின்படி சீன நிறுவனங்கள் மூன்று சவால்களை குறிப்பிட்டுள்ளன. முதலாவதாக, இந்த மரபானது தொலைபேசிகள் மற்றும் கம்ப்யூட்டர்களை மட்டுமே இணைக்கின்றன என்பதாகவும். ஆனால் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் உடன் பரந்த அளவிலான கம்ப்யூட்டர்களை இதர கருவிகளுடன் இணையம் வாயிலாக இணைக்க முடியும் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்று கூறி உள்ளன. இரண்டாவதாக டி.சி.பி / ஐ.பி-யில் பாதுகாப்பு விஷயங்கள் உள்ளன. இறுதியாக இப்போதைய மரபானது சில பகுதிகளில் மட்டுமே திறனுடன் இருப்பதாகவும் அதன் திறன்களை விரிவாக்க வேண்டும் என்றும் சீனா வாதிடுகிறது. எனினும், ஐபி என்பது முழுமையாக செயல்படக் கூடியது என்று வல்லுநர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்திய - சீனா
இந்திய - சீனா

இந்த பொருளில் சீனாவின் தீங்கிழைக்கும் தந்திரங்களை மிகவும் ஆழமாக பார்க்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. நெட்டிசன்களை வலுகட்டாயமாக வேறு ஒரு நெட்டுக்கு மாற வைக்கக் கூடியதாக இருக்கலாம். ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை விரிவாக்கத்திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் இன்டர்நெட் மரபில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சீனாவின் நோக்கம் ஆக்கப்பூர்வமானதாகத் தோன்றலாம். ஆனால், முழுமையாக இன்டர்நெட் என்பது சீனாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி விடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். ஹூவாய் தவிர மரபு மாற்றத்தை பரிந்துரைத்த இதர அனைத்து மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களும் சீனாவின் அரசு சார்பு நிறுவனங்களாகும். அரசுக்கு எதிரான செய்திகளில் கடுமையான தணிக்கைகளை அந்த நாடு அமல்படுத்தி வருகிறது. முகநூல், டிவிட்டர் ஆகிய சமுக வலைதளங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இணையம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் அது நடுநிலையாக இருந்து வருகிறது. இணையத்தில் நிறுவன அதிகாரம் என்பது வடிகட்டப்பட்ட ஒரு தலைபட்சமான தகவல்களை கொண்டது என்ற பொருளாகும். செய்தி இப்போது வழங்கப்படும் முறையில் கட்டுப்படுத்தப்படுவதற்கு சீனா உடன் சில நாடுகள் இணையலாம். புதிய மரபு குறித்து சீனா முன்னெடுக்கும் பட்சத்தில், ஒரே உலகம் ஒரே நெட் என்ற கருத்தாக்கம் நீண்டநாட்களுக்கு நீடிக்காது. ஐதராபாத்தில் அடுத்த மாதம் சர்வதேச தகவல் தொடர்பு தரநிலைகள் என்ற ஒரு கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்திய - சீனா
இந்திய - சீனா

இந்த கூட்டத்தில் மரபு மாற்றம் குறித்த செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான இணைய வல்லுநர்கள் மற்றும் இளம் பொறியாளர்கள் இணையத்தை சிறந்த தளமாக மாற்றப் பாடுபட்டுள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் அதன் ஒற்றுமையை நிர்வகிக்க கடுமையாக உழைத்துள்ளனர். அறிவுத்திறத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கும் சீனாவை சர்வதேச சமூகம் எதிர்கொள்வதற்கு இதுவே சரியான நேரமாகும். இது போன்ற முக்கியமான நடவடிக்கைக்கான இடமாக இந்தியா மாற வேண்டும். சீனாவின் தீங்கிழைக்கும் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இந்த மாநாடு செயல்பட வேண்டும் என்று இணைய வல்லுநர்கள் விரும்புகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.