அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், சீனா ராணுவத்துடன் தொடர்புடைய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் நுழைவு இசைவுகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இன ரீதியாகப் பாகுபாட்டைக் காட்டும் வகையில் அமெரிக்காவின் நடவடிக்கை இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், சீனாவில் படிக்கும் அமெரிக்கா மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஹாங்காங்கின் சிறப்பு வர்த்தகத் தகுதி ரத்துசெய்யப்பட்டதற்கும் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது இரு நாடுகளின் உறவை மேலும் சிக்கலாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: வாஷிங்டனில் மீண்டும் ஊரடங்கு: காரணம் கரோனா அல்ல