ஓராண்டிற்கு முன்பு சீனாவில் பரவ தொடங்கிய கரோனா தொற்று, இன்னும் ஓய்ந்தப்பாடிலலை. பல மாகாணங்களில், கரோனா தொற்று கட்டுப்படுத்திருந்தாலும், முழுவதுமாக சரியாகவில்லை. சமீபத்தில், பரவத் தொடங்கிய உருமாறிய கரோனாவும், சீனாவில் கால் பதித்திருந்தது.
இந்நிலையில், சீனாவின் முக்கிய மாகாணமான ஹுபேயில், கரோனா எண்ணிக்கை திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஷிஜியாஜுவாங்கில் கச்செங் மாவட்டத்தின் ஜெங்க்குன் கவுண்டியில் உள்ள 12 கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏழுந்துள்ளது.
அதே சமயம், கரோனாவின் பிறப்பிடமாக கருதப்டும் வூஹானில் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்களே கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறப்படுகிறது.