பெய்ஜிங்கில் கடந்த ஐம்பது ஆண்டுகள் இல்லாத அளவில் கடும் குளிரால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். வானிலை மையம் கூற்றுப்படி, அங்கு மைனஸ் 19.6 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. முன்னதாக, 1966இல்தான் இத்தகைய குளிர் காற்றுடன்கூடிய குறைந்த வெப்பநிலை பதிவானது.
இன்று (ஜன. 07) அதிகாலை, நகரத்தின் 20 தேசிய அளவிலான வானிலை ஆய்வு நிலையங்களிலும் வெப்பநிலை மிகக் குறைவான அளவையே காட்டியதாக பெய்ஜிங் நகராட்சி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, மக்களுக்கு கடும் குளிர், காற்று தொடர்பாக எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. மேலும், நாளை (ஜன. 08) வெப்பநிலை பூஜ்ஜியத்தில் இருக்கும் என வானிலை மைய அலுவலர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.