ETV Bharat / international

உலக அமைதிக்கான விருது பெற்ற வங்க தேச மாணவர் - இணையவழி மிரட்டல்

இணையவழி மிரட்டல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும், வங்க தேசத்தைச் சேர்ந்த சதத் ரஹ்மான் எனும் மாணவர் உலக அமைதிக்கான விருது பெற்றுள்ளார்.

உலக அமைதிக்கான விருது பெற்ற வங்க தேச மாணவன்

author img

By

Published : Nov 14, 2020, 5:53 PM IST

வங்க தேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் சசத் ரஹ்மான். இவர் தனது 15வயது தோழி, சைபர் புல்லிங் (Cyberbullying), அதாவது இணையவழி மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளார்.

இதற்காக, சைபர் டீன் எனும் செல்போன் செயலியை உருவாக்கி, அதன் மூலம் சைபர் புல்லிங்கிற்கு ஆளாகும் இளைஞர்களுக்கு உதவிச்செய்து வந்துள்ளார். இச்செயலி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 300க்கும் மேற்பட்டோருக்கு இணைய வழி மிரட்டல்கள் தொடர்பாக உதவிக்கரம் நீட்டியுள்ளார். அதேபோல் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை 45,000 இளைஞர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, மாணவர் சதத் ரஹ்மானுக்கு உலக அமைத்திக்கான விருது வழங்கப்படுவதாக, மனித உரிமை செயற்பாட்டாளரும், நோபல் பரிசு பெற்றவரும் பெண்கள் கல்விக்குறித்து தொடர்ந்து குரல்கொடுத்து வருபவருமான மலாலா யூசப்சையி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய சசத் ரஹ்மான், "உலக அரங்கில் தன்னுடைய செயலால் வங்க தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதை எண்ணிப்பெருமைக் கொள்கிறேன். மியான்மர் நாட்டில் வெடித்த வன்முறைக் காரணமாக, ரோஹிங்யாக்கள் வங்க தேசத்துக்கு குடிப்பெயர்ந்த போது, அவர்களது நடவடிக்கை குறித்த தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். அப்போது தான் இளைஞர்கள் ஒன்றிணைந்தால் மாபெரும் சக்தியாக உருவெடுக்க முடியம் என்பதை உணர்ந்தேன். சைபர் புல்லிங் எப்போது முழுவதுமாக ஒழிக்கப்படுகிறதோ, அப்போது தன்னுடைய செயலிக்கு பயன் இருக்காது" என்றார்.

இதையும் படிங்க: கழிப்பறையில் கேமாரா வைத்தார்கள் : பிஎம்எல்என் துணைத்தலைவர் மரியம் நவாஸ் பகீர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.