வங்கதேசத்தில் படித்த 19 வயது மாணவியான நுஸ்ரத் ஜஹான் ரஃபி தனது தலைமை ஆசிரியருக்கு எதிராக அளித்த பாலியல் புகாரைத் திரும்பப் பெற மறுத்ததால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 16 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹவீச் அஹமத் கூறுகையில், "வங்கதேசத்தில் கொலை செய்துவிட்டு ஒருவரால் தப்பிவிட முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு காட்டுகிறது" என்று கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம், 19 வயது நுஸ்ரத் ஜஹான் ரஃபிக்கு அவரது தலைமை ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துவந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
'புகாரை திரும்பப்பெற மிரட்டுங்கள் மறுத்தால் அவளைக் கொன்றுவிடுங்கள்' என்றும் தலைமை ஆசிரியர் கூறியதைக் கேட்டு மாணவியை மிரட்டியுள்ளனர். அவர் புகாரை திரும்பப்பெற மறுக்கவே, அவரது ஆடையைக்கொண்டே அவரது கையை கட்டியுள்ளனர். பின் மண்ணெண்ணெய் ஊற்றி அவரை உயிருடன் கொளுத்தியுள்ளனர்.
இதைத் தற்கொலையாகச் சித்திரிப்பதே அவர்களின் எண்ணம், ஆனால் தீயில் அவர் கட்டப்பட்ட துணி எரிந்துவிட அவர் மாடியிலிருந்து கீழே வந்துவிட்டார். 80 விழுக்காடு தீயால் அவர் பாதிக்கப்பட்டதால் ஐந்து நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் 10ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 'மோடி ஹிட்லர்' மனித வெடிகுண்டை கட்டி மிரட்டும் பாக்., சர்ச்சை பாடகி