ETV Bharat / international

ஆஸ்திரேலியா காட்டுத்தீ விபத்து - 23 பேர் உயிரிழப்பு - ஸ்காட் மோரிசன்

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

australia-wildfire-23-died-and-6-people-are-missing
ஆஸ்திரேலயா காட்டுத்தீயில் கான்பெரா, விக்டோரியா அதிகம் பாதிப்பு!
author img

By

Published : Jan 6, 2020, 1:56 PM IST

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்பானது தலைநகரம் கான்பெராவிலும் பரவி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று காலை அப்பகுதியில் சூழ்ந்த புகைமூட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தென் வேல்ஸ், விக்டோரியா, கங்காரு உள்ளிட்ட தென் ஆஸ்திரேலிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவின்பேரில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்க 20 மில்லியன் டாலர் செலவில் நான்கு அதிநவீன தீயணைப்பு விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்ததாகவும், ஆறு பேர் காணாமல்போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காட்டில் வாழும் 480 உயிரினங்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.