உலகின் மிகச்சிறிய கண்டமான ஆஸ்திரேலியா, கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முக்கிய யுக்தியாக புதிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. அந்நாட்டின் சுகாதாரத் தொழிலாளர்களைக் கொண்டு புறநகர்ப் பகுதிகளில் வீடுதோறும் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அந்நாட்டில் உள்ள பத்து முக்கியப் புறநகர்ப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் பரிசோதனை மேற்கொள்வதை இலக்காக வைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, தேவைப்பட்டால் ராணுவத்தையும் இந்த நடவடிக்கையில் களமிறக்க முடிவுசெய்துள்ளது.
இதுவரை, அந்நாட்டில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு என்பதால் அங்கு மக்கள்தொகை அடர்த்தி குறைவாகக் காணப்படுகிறது. இந்தச் சாதகமான சூழல் ஆஸ்திரேலியாவில் நோய்ப் பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'பயங்கரவாதிகளின் புகலிடமாகத் பாகிஸ்தான் திகழ்கிறது' - அமெரிக்கா