இதுகுறித்து ஜப்பான் வானிலை மையம் (Japan Meteorological Agency) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹகிபிஸ் (Haqibis) எனும் அதி பயங்கர சூறாவளி (5 Category) 180 கி.மீ., வேகத்தில் ஜப்பானைத் தாக்கும் எனவும்; இதனால் 252 கி.மீ., வேகத்துக்கு சூறைக் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே உள்ள 'இசூ' தீபகற்பத்தில் 'ஹகிபிஸ்' எனும் புயல் இன்று மாலை கரையைக் கடந்தது. இதைத் தொடர்ந்து, கிழக்கு கடலோரப் பகுதிகளை நோக்கி, இப்புயல் நகர்ந்து வருகிறது.
இதனிடையே, ஜப்பானின் பல்வேறுப் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி தொடர்பான விபத்துகளில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 பேர் காயமடைந்துள்ளனர். இதுதவிர, குடியிருப்புகள், கட்டடங்கள், மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், இந்த சூறாவளியின் பாதிப்பு குறித்து, ஜப்பான் வாசிகள் வீடியோக்கள், புகைப்படங்களைப் பகிர்ந்து #PrayforJapan என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஜப்பான் 60 ஆண்டுகளில் கண்டிடாத மகிப்பெரிய சூறாவளி 'ஹகிபிஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.
5.7 ரிக்கடர் நிலநடுக்கம்
'ஹகிபிஸ்' சூறாவளியை அச்சத்தோடு எதிர்நோக்கியுள்ள ஜப்பான்வாசிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக, சிபா மாகாணத்துக்கு அருகே 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: