ETV Bharat / international

உலக ஏமாளிகள் தினம் இன்று! - சுவாரஸ்ய தகவல்கள்...

உலக முழுவதும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. முட்டாள்கள் தினம் பற்றிய சில சுவாரஸ்யங்களை காணலாம்.

april fools day
author img

By

Published : Apr 1, 2019, 8:43 AM IST

Updated : Apr 1, 2019, 8:54 AM IST

ஏப்ரல் 1 ஏன் முட்டாள் தினமானது!

16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் பல பகுதிகளில்ஏப்ரல்1ஆம் தேதிதான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. 1562ஆம் ஆண்டின் பாதியில், அப்போதைய 13வது போப் ஆண்டவரானகிரகரி புதியஆண்டு முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

இந்த புதிய புத்தாண்டை சில ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்த நாட்டு மக்களை பிற நாட்டு மக்கள் முட்டாள்கள் என்றும், ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள் தினம் என்றும் கொண்டாடியுள்ளனர். அந்த வழக்கப்படி உலக முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

முட்டாள் தினஅட்டகாசங்கள்!

காலையில் எழுந்ததில் இருந்து வீட்டில் என்றைக்கும் அடுப்பறை பக்கம் போகாத நாம் இன்று அம்மாவை முட்டாள் ஆக்கும் முனைப்பில் அடுப்பறை சென்று, அம்மாவை முட்டாளாகவும்ஆக்குவோம். உண்மையில் சொல்லப்போனால் நாம் ஏமாறுகிறோம் என்று தெரிந்தும் நம்மிடம் ஏமாந்தது போல் நடிப்பார்.

அடுத்துநம்ம அப்பா நம்மை விட உஷார்! நம்மை ஏமாற்ற நினைத்து, அதில் சில நேரம் வெற்றியும் பெறுவார். அதற்கு அடுத்தப்படி நம்ம மாமா, அத்தை, தாத்தா, பாட்டி அனைவரும் நம்மை ஏமாற்றவும் நினைப்பார்கள், ஏமாற்றமும் அடைவார்கள்.

அதைத் தாண்டி இன்று யார் என்ன சொன்னாலும் ஏமாறக் கூடாது என்பதற்காகநாம் யார் பேச்சையும் இன்று நம்ப மாட்டோம். அவர்கள் உண்மையை சொன்னாலும் முட்டாள் ஆகிட கூடாது! சூனா பானா... என கெத்தாக செல்வோம்.

பொதுவாக நாம் சொல்கின்ற பொய் என்று பார்த்தால், ‘உங்க சட்டையில என்ன கரி!’. இது தெரிந்தும் நாம் ஏமாற்றம் அடைந்து விடுவோம்.

முட்டாள் தினத்திற்கு என்றுகதை, அட்டகாசம் என்று இருந்தாலும் எப்படி... வயது வித்தியாசமின்றி எல்லாரும், எல்லாரையும் முட்டாள் ஆக்குவதற்கும், முட்டாளாக ஆவதற்கும் மகிழ்ச்சியாக தயாராகுவதுதான் ஏப்ரல் 1ஆம்தேதிக்கு நாம் கொடுக்கு மிகப் பெரிய முட்டாள் தின பரிசு.

தமிழில் முட்டாளுக்கு ஒரு கதை

அந்த காலத்தில் பெரிய தேர்கள் ஊர்வலம் வரும்போது அதனை ஆங்காங்கேநிறுத்தவதற்கு சக்கரத்தில் முட்டுக் கொடுப்பதற்காகவே ஆட்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். பெரிய மரக்கட்டைகளை தேர் சக்கரத்தில் முட்டுகொடுப்பதே அவர்களின் வேலை. முட்டுக்கொடுக்கும் ஆட்கள்தான் 'முட்டு ஆள்' என்று அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் வேலை ஒன்றை தவிர வேறு வேலைகளை கொடுத்தால் அதை செய்யத்தெரியாது.

அதேபோல ஒரு வேலையை சிறப்பாக செய்யத் தெரியாத நபர்களை முட்டு ஆள் மாதிரி இருக்கிறாயே! என்று சொல்லத் தொடங்கினர். இதுவே காலப்போக்கில் மருவி 'முட்டாள்' என்று ஆனது. நாளடைவில் அதுவே அறிவில்லாதவர்கள் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

முட்டாள் என்பது ஒரு வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யத் தெரியாத நபர்களை உவமையாக குறிப்பிடும் சொல்லாகும்.ஆனால் அறிவில்லாதவர்களை 'அறிவிலி' என்று சொல்வதே தமிழில் பொருத்தமான சொல்லாகும்.

அறிவாளி என்பதன் எதிர்ப்பதம் அறிவிலி என்பதாகும்​​​​​​​

பிறரை முட்டாளாக்கும் முனைப்பில் தன்னை அறிவாளி என நினைத்து திரியும் முட்டாள்களுக்கு முட்டாள் தின நல்வாழ்த்துகள்!

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 1, 2019, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.